போலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், எஸ்.எம் நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார்(35). இவர், ஆவடி உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 5 அணியில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா (29). இவர்களுக்கு திருமணமாகி 7ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று ராஜ்குமார் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு, திவ்யா தனது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். பின்னர், சிறிது நேரங்கழித்து மகன் சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தான். இதனை பார்த்து, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது, அங்கு திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து, காவலர் குடும்பத்தினர் ராஜ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து, திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும், புகாரின் அடிப்படையில், ஆவடி  போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில்  திவ்யா மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், திவ்யாவுக்கு திருமணமாகி 7ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஒ விசாரணையும் நடக்கிறது. இதற்கு பிறகு, திவ்யாவின் சாவு குறித்து முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>