மின் கசிவால் 3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மின் கசிவால் 3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின. ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஏழுமலை (55), ராஜம் (50), பிரேம்குமார்  (30).  இவர்கள், 3 பேரின் குடிசை வீடுகள் அருகருகில் உள்ளன.  இந்நிலையில், ஏழுமலை வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக நேற்று பிற்பகல் 12 மணியளவில் திடீரென தீ பிடித்தது. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து அணைப்பதற்குள் தீ மளமளவென பக்கத்து வீடுகளில்  தீ பரவியது. உடனே, அங்கிருந்தவர்கள் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அவர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>