5 மாநிலங்களில் இருந்து டெல்லி வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: கொரோனா சான்று கட்டாயமாகிறது

புதுடெல்லி: மகாராஷ்டிரா, கேரளா மற்றும் பஞ்சாப், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வருவோர் கொரோனா இல்லை என்ற சான்றிதழை காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது.பொதுமக்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஒரு சில மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து  கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் இருந்து மக்கள் டெல்லிக்கு வருவதற்கு அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் இருந்து விமானம், ரயில், பேருந்துகளில் வரும் மக்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் காட்ட வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை இரவு முதல் இது கட்டாயமாக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>