×

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? நீரவ் மோடி வழக்கில் கோர்ட் இன்று தீர்ப்பு

லண்டன்: மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில்   13 ஆயிரம் கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்து தப்பியோடி விட்டார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதனிடையே, அவர் கடந்த 2019ல் லண்டனில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் முறையில் நீரவ் மோடி ஆஜரானார். இந்த வழக்கில், பலமுறை முயன்றும் இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. இந்நிலையில், அவரை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், மாவட்ட நீதிபதி சாமுவேல் கூசி, இன்று தீர்ப்பு வழங்க உள்ளார். இதையடுத்து, நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிய வரும். இதனால், இந்த தீர்ப்பை இந்தியா மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

Tags : India ,Nerav Modi , Will he be deported to India? Court rules in Neerav Modi case today
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...