பிரதமர் மோடி பெருமிதம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை

புதுடெல்லி: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு, விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2ஆயிரம் செலுத்தப்படும். பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகின்றது.  இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டிற்கு உணவு அளிப்பதற்காக இரவும், பகலும் கடினமாக உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை செழிப்பாக்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. விவசாயிகளின் உறுதியும், ஆர்வமும் ஊக்கமளிக்கின்றது. குறைந்தபட்ச ஆதார விலையில் உயர்த்தியதற்கான பெருமை எங்களது அரசை சேரும். விவசாயிகளின் வருமானத்ைத இரட்டிப்பாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகின்றது” என்றார்.

Related Stories:

>