வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசை தட்டிச் சென்றனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. முன்னதாக, சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். நிகழ்ச்சியில், கலெக்டர் கண்ணன், வத்திராயிருப்பு தாசில்தார் அன்னம்மாள், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏடிஎஸ்பி மாரிராஜன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>