ரேஷன் அரிசி கடத்திய மினி டெம்போவை: 2 கிமீ தூரம் துரத்தி பிடித்த போலீஸ்

நித்திரவிளை: நித்திரவிளை காவல்நிலைய தனிப் பிரிவு ஏட்டு ஜோஸ், இருசக்கர வாகன ரோந்து போலீஸ் சுஜின் ஆகியோர் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சரல்முக்கு பகுதியில் ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினி டெம்போ வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். உடனே போலீசார் மினிடெம்போவை   சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்றனர்.

பின்னர் நம்பாளி என்ற இடத்தில் வைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் மினி டெம்போவை சோதனை செய்தனர். அதில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தையும், டிரைவரையும் போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில்    புதுக்கடை பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல வந்ததாகவும், வாகனத்தை ஓட்டி வந்தது கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான காரோடு தெற்கத்தே விளைவீடு பகுதியை சேர்ந்த சஜி(27), என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நித்திரவிளை போலீசார் வாகனம், பறிமுதல் செய்த  அரிசி, டிரைவர் ஆகியோரை  நாகர்கோவில் புட் செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: