எம்பி தேர்தலில் திமுக கூட்டணிக்கு அதிக ஓட்டு : தோல்வி பயத்தால் தொகுதி மாற அதிமுக எம்எல்ஏக்கள் ஆயத்தம்

மதுரை : நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக ஓட்டுகள் பெற்றிருப்பதால் அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி மாற கட்சி மேலிடத்தில் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில், 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 8 பேர் எம்எல்ஏக்கள் ஆனார்கள். 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வெங்கடேசனும், அதிமுக சார்பில் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மகன் ராஜ்சத்யனும் போட்டியிட்டனர். இதில், வெங்கடேசன் 4,47,075 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராஜ்சத்யன் 3,07,630 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வாக்கு வித்தியாசம் 1,39,395 ஆகும

மதுரை மக்களவை தொகுதிக்குட்பட்ட முக்கிய சட்டமன்ற தொகுதியான மதுரை மேற்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதியாகும். அவர் இங்கு இரண்டு முறை வெற்றி பெற்றார். இத்தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 82,022 ஓட்டுகளும், அதிமுக 55,208 ஓட்டுகளும் பெற்றன. அதிமுகவை விட திமுக கூட்டணி 26 ஆயிரத்து 814 ஓட்டுகள் கூடுதலாக பெற்றன. அமைச்சர் செல்லூர் ராஜூ வெற்றி பெற்றதை விட 2 மடங்கு ஓட்டுகள் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு கூடுதலாக கிடைத்திருப்பதால், இத்தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டால் கரை சேருவோமா என்ற அச்சத்தில் செல்லூர் ராஜூ உள்ளார

மதுரை வடக்கு தொகுதியில், அதிமுகவை விட திமுக கூட்டணி 28,908 வாக்குகளை பெற்றுள்ளது. இதனால், இத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தொகுதி மாறி, திருப்பரங்குன்றம் தொகுதியில் சீட் கேட்டுள்ளார்.அதேபோல், மேலூர் சட்டமன்ற தொகுதியில் 24,831 ஓட்டுகளும், மதுரை தெற்கில் 423 ஓட்டுகளும், மதுரை கிழக்கில் 34,800 ஓட்டுகளும், மதுரை மத்திய தொகுதியில் 31,343 ஓட்டுகளும் திமுக கூட்டணி கூடுதலாக பெற்றனநாடாளுமன்ற தேர்தலில் அமமுக 85,747 ஓட்டுகள் பெற்றன. அதிமுக, அமமுக ஓட்டுகளை சேர்த்தாலும், அதிமுக வெற்றி பெற முடியாத சூழ்நிலையால், வரும் தேர்தலில், அமைச்சர் செல்லூர் ராஜூ மட்டும் மேற்கில் நிற்க முன் வந்துள்ளார். வடக்கு எம்எல்ஏ தொகுதி மாறுகிறார். மேலூர் தொகுதியில் பெரியபுள்ளானுக்கு மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம். மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு ஆகியவற்றை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: