ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

தஞ்சை: தஞ்சையில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அதிமுக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக தஞ்சை ரயில் நிலையம் அருகே இருக்கக்கூடிய ஜெயலலிதாவின் முழு உருவ சிலைக்கு சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்துவதற்கு அதிமுகவினர் ஒன்று திரண்டிருந்தனர்.

ஆனால் அதற்க்கு முன்பாகவே அமமுகவினர் ஒன்று திரண்டு ஆள் உயரம் இருக்க கூடிய அவர்களது கொடியை நட்டுவிட்டும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்திருந்ததால் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாங்கள் முறையாக காவல்த்துறையிடம் அனுமதி பெற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அனுமதிவாங்கி கொடியை வைத்திருக்கிறோம். நீங்கள் எவ்வாறு எங்கள் கொடியை கிழித்தெறியலாம் என அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்த்துறையினர் இரண்டு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அமமுகவினர் அதிக அளவில் கூடி தங்கள் கொடியை கிழித்த அதிமுகவினரை உடனே கைது செய்யவேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அதிமுகவினர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க வரும் பொழுது அவர்களுக்கு எதிராக அமமுகவினர் கோஷமிட்டதால் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related Stories:

>