சில்லி பாயின்ட்...

* ‘பகல்/இரவு டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் முக்கியம் வாய்ந்தது. எஞ்சியுள்ள 2 டெஸ்டிலும் வெற்றி பெற கடுமையாக முயற்சிப்போம். டெஸ்ட் போட்டிகளில் இஷாந்த் முழு அர்ப்பணிப்பை வழங்கி வருகிறார்’ என்று இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார்.

* மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா இருவரும் மோதிரா, சர்தார் படேல் ஸ்டேடியத்தை நேற்று பார்வையிட்டனர்.

* 3வது டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சு கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார்.

* விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணி நேற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது. மகாராஷ்டிரா 20 ஓவரில் 279/9 (யாஷ் நாஹர் 119, அஸிம் காஸி 104); மும்பை 47.2 ஓவரில் 280/4 (ஷ்ரேயாஸ் 103*, ஜெய்ஸ்வால் 40, துபே 47, பிரித்வி 34, சூரியகுமார் 29).

Related Stories:

>