அவுரங்காபாத்தில் 75 குடோன்களில் வெங்காயம் இருப்பு வைக்க 40,000 விண்ணப்பங்கள்

அவுரங்காபாத்: அவுரங்காபாத்தில் உள்ள வேளாண் துறைக்கு இந்த ஆண்டு 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை தங்கள் வெங்காயத்தை இருப்பு வைக்க 75 மையங்களில் அனுமதி கேட்டு வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவுரங்காபாத் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 13 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து வெங்காய இருப்பு வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வேளாண்துறைக்கு வந்தன. இதையடுத்து மாவட்டத்தில் 1000 மையங்களில் வெங்காயம் இருப்பு வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு 20 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. மகா பாலேட்பதான் விகாஷ் அபியான் திட்டத்தின் கீழ் வெங்காயம் இருப்பு வைப்பதற்கு இடவசதி கேட்டு வேளாண்துறைக்கு இந்த ஆண்டு 40,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவை 75 மைங்களில் வெங்காயம் இருப்பு வைக்க அனுமதி கேட்டு வந்துள்ள விண்ணப்பங்கள் என வேளாண்துறை அதிகாரி தெரிவித்தார். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வெங்காய இருப்பு வைக்க அனுமதி வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து தலா ரூ.87,500 கட்டணத்தில் 75 மையங்கள் வெங்காய இருப்பு வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் `` இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் 40 ஆயிரத்து 623 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குலுக்கல் முறையில் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அப்போது அவர்கள் தங்கள் ஆவணங்களை நேரில் தாக்கல் செய்யவேண்டும் என்றார். கடந்த 2015 முதல் இந்த மாவட்டத்தில் 4500க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவித்தார்.

Related Stories: