திஷாவுக்கு ஜாமீன் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: `டூல்கிட்’ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விவசாயிகளுக்கு ஆதரவான `டூல்கிட்’ விவகாரத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கடந்த 14ம் தேதி பெங்களூருவில் கைது செய்தனர். இதையடுத்து, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்பு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, இவ்வழக்கில் ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் திஷா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்தர் ராணா ஜாமீன் மீதான தீர்ப்பை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அப்போது, நீதிபதி ராணா ``சாட்சியங்கள் போதாது, புனையப்பட்டு இருக்கின்றன. 22 வயது இளம்பெண் மீது குற்றம் செய்திருப்பதற்கான ஆதாரம் எதுவும் முழுமையாக இல்லை. இதனால், ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்கு தெளிவான காரணம் எதுவுமில்லை. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது,’ என உத்தரவிட்டார்.

Related Stories: