கேரளாவில் மார்க்சிஸ்ட் கொடி இருந்தால் முதல்வர் அலுவலகத்தில் இருந்தே தங்கம் கடத்தலாம்: ராகுல் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடி இருந்தால் கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து கொண்டே தங்கம் கடத்தலாம்,’ என்று ராகுல்காந்தி பேசினார். கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கடந்த 2 வாரங்களுக்கு முன், ‘ஐஸ்வர்ய யாத்திரை’ என்ற பெயரில் கேரளா முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டார். இதன் நிறைவு விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

அனைத்தையும் சரி செய்கிறேன் என்று பிரசாரம் செய்துதான் பினராய் விஜயன் கடந்த முறை கேரளாவில் ஆட்சி அமைத்தார்.

ஆனால், அவர் அந்த வாக்குறுதியை மக்களுக்கு அளித்தாரா? கட்சியினருக்கு அளித்தாரா? என்று தெரியவில்லை. கேரளாவில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே அரசு ேவலை கிடைக்கும் என்ற நிலை உள்ளது. கம்யூனிஸ்ட் கொடி பிடித்தால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து கொணடே கூட தங்கம் கடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கை அமலாக்கத் துறையும், சுங்க இலாகாவும், தற்போது மந்த கதியில் விசாரிக்கின்றன. இதற்கு என்ன காரணம், மார்க்சிஸ்ட். பாஜ இடையே சமரசம் ஏற்பட்டு விட்டது என்பதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

* ஆணவக்காரர், கோழை

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், ``தனது கொள்கைகளுக்காக பொறுப்பேற்கும் துணிவில்லாத கோழை, ஆணவம் பிடித்தவர் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்திலும், விவசாயிகளை போராட்டம் நடத்தும் வழக்கம் உடையவர்கள் என்று இழிவுபடுத்தினார். திமிர் பிடித்த அரசுகளுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர். அதற்கான நேரம் இப்போது வந்து விட்டது,’’ என்றார்.

Related Stories: