நிலக்கரி மோசடி வழக்கு மம்தாவின் சகோதரர் மகன் வீட்டில் சிபிஐ விசாரணை: மனைவியிடம் கிடுக்கிப்பிடி கேள்வி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலக்கரி மோசடி தொடர்பாக கடந்த நவம்பரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா, அவரது தங்கை மேனகா கம்பீருக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டி இருந்தது. இதன் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படியும் அவர்கள் 2 பேருக்கும் கடந்த ஞாயிறன்று சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது.  

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தனது வீட்டிற்கு வந்து விசாரணை செய்து கொள்ளலாம் என சிபிஐ.க்கு ருஜிரா கடிதம் எழுதினார்.

இதனை தொடர்ந்து, ருஜிராவின் சகோதரி மேனகா காம்பீர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்ற 2 பெண் சிபிஐ அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று ருஜிராவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பல மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. திடீர் வருகையால் பரபரப்பு:  சிபிஐ அதிகாரிகள் ருஜிரா வீட்டிற்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்தார். 10 நிமிடங்கள் அபிஷேக்கிடமும், ருஜிராவிடமும் அவர் ரகசியமாக பேசினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories: