குமரி மக்களவை தொகுதி பா.ஜ வேட்பாளர் யார்? மாநில தலைவர் முருகன் பதில்

நாகர்கோவில்: குமரி மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் குறித்து  தேர்தல் பணிக்குழுவிடம் அறிக்கை பெற்று தேசிய தலைமை அறிவிக்கும் என்று முருகன் கூறினார். நாகர்கோவில் சட்ட மன்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பா.ஜ மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். 25ம் தேதி (நாளை) கோவைக்கு மோடி வருகிறார். 28ம் தேதி விழுப்புரம் கூட்டத்திற்கு அமித்ஷா வருகிறார். மார்ச் 8, 9 தேதிகளில் தேசிய தலைவர் நட்டா வருகிறார்.

இம்முறை இரட்டை இலக்கத்தில் சட்டசபைக்குள் நுழைவோம். குமரி மக்களவை தொகுதி வேட்பாளர், சட்டமன்ற வேட்பாளர்கள் குறித்து  தேர்தல் பணிக்குழுவிடம் அறிக்கை பெற்று தேசிய தலைமை அறிவிக்கும். குமரியில் எம்.பி மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் பா.ஜனதா பங்கு பெறுமா என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும். சமையல் எரிவாயு மானியம் ரத்தாகவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>