இணையதள மிரட்டல்கள், ஆன்லைன் சூதாட்டங்கள் மாணவர்கள், பெற்றோர்களுக்கு கொஞ்சம் புரிய வைய்யுங்க...

* டெல்லி பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

புதுடெல்லி; இணையதள மிரட்டல்கள், ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிகள் புரிய வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி பள்ளிகளின் முதல்வர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:கவலையற்ற முறையில் பள்ளி வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்கும் சூழல், கொரோனா ஊரடங்கால் மாறிப்போய் ஆன்லைனில் அறிவை பெருக்க வேண்டிய நிலைக்கு மாறியுள்ளது. எதையும் சரிபார்க்க முடியாத அளவுக்கு இணையதளம் இன்று பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. இணையதளத்தில் இணைந்தாலே இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும் என்பதை அனைவரும் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இன்னும் கூடுதலாக இதில் உள்ள ஆபத்தை மாணவர்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்க விரும்புகிறோம். நமது குழந்தைகளை இந்த இணையதள மிரட்டலில் இருந்து பாதுகாக்க ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அவர்களின் அப்பாவித்தனத்தை வைத்து அவர்களின் ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்காதவகையில் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். இந்திய குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் சார்பில் நடந்த ஆய்வில் ஆன்லைனில் சிறுவர்கள் தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், அதன்மூலம் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருவதாகவும் அதுவும் இந்த கொரோனா ஊரடங்கில் குழந்தைகள் ஆபாச படத்தின் தேவை அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இணையதள பயன்பாடு, பாதுகாப்பு குறித்து பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இப்போது மிகவும் அவசியம். இதுபற்றிய தெளிவான விதிமுறையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் என்சிஇஆர்டி மற்றும் யுனெஸ்கோ அமைப்புகள் வழங்கியுள்ளன. மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதுபற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். இதன் முக்கிய நோக்கம் டிஜிட்டல் வழித்தளத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எவ்வாறு சரியாக, பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதுபற்றி அந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இணையதள மேசாடிகள், இளையதளத்தில் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பது பற்றியும், ஏதாவது தவறாக நடந்தால் மாணவர்கள், ெபற்றோர்களை காப்பாற்ற இந்திய நீதித்துறையில் உள்ள சட்டங்கள் பற்றியும் விளக்கிக்கூறப்பட்டுள்ளது. மேலும் இணைதள மோசடி குறித்து வந்தார் அதுபற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி அனைத்து பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாணவர் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் குழு மூலம் தெரிவித்து இணையதள மிரட்டல்களில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ளவது என்பது பற்றி அவர்களுக்கு விளக்கிக்கூற வேண்டும்.

Related Stories: