பிரசன்ன வெங்கடரமணசுவாமி கோயில் பிரம்மோற்சவம்: மார்ச் 22ம் தேதி தொடக்கம்

தங்கவயல்: கர்நாடக மாநில அரசின் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கி வரும் தங்கவயல் பிரசன்ன லட்சுமிவெங்கடரமணசுவாமி கோயில் பிரம்மோற்சவம் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் அமைந்துள்ள கர்நாடக மாநில அரசின் இந்து சமய அறநிலைய துறை கீழ் இயங்கிவரும் புகழ்பெற்ற பிரசன்ன லட்சுமி வெங்கடரமணசுவாமி கோயில் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு விழா வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை 13 நாட்கள் நடத்துவதாக இந்து சமய அறநிலையதுறை அறிவித்துள்ளது.

Related Stories: