புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள்பிரதிநிதிகள் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட பஞ். முதன்மை செயலதிகாரி வலியுறுத்தல்

கோலார்:  கோலார் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சிறப்பு நிர்வாக பயிற்சி கொடுக்கும் முகாம் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசும்போது, ``நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம் கர்நாடகமாகும். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கிராம பஞ்சாயத்துகள் தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது.அதன் மூலம் கிராமத்திற்கு ேதவையான திட்டங்களை பஞ்சாயத்து நிர்வாகமே வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கிராமங்களில் சீரான சாலை, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், தூய்மையான கழிவறை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைபாடு உள்ளதாக தெரியவந்துள்ளது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

பயிற்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவரும் தேர்தல் சமயத்தில் பல திட்டங்கள் செயல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்திருப்பீர்கள். அதை செயல்படுத்த வேண்டும். உங்கள் கிராமத்தில் முதலில் மக்களுக்கு தேவையான வசதிகள் என்னவென்பதை பட்டியலிட்டு, அதை செயல்படுத்துவதற்கான திட்ட வரைவு தயாரித்து முறைப்படி தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி செயல்படுத்த வேண்டும். கிராமங்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்பது மகாத்மாகாந்தியின் கனவாக இருந்தது. அதை நனவாக்கும் முயற்சியை பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: