காட்டுபன்றி தாக்குதலுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மழையை நம்பி பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் மழை இல்லாமல் பொய்த்து ேபாவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலை ஏற்படுகிறது.  மற்றொருபுறம் காட்டு வனவிலங்குகள் படையெடுப்பால் விளைபயிர்கள் நாசமாகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குரங்கு மற்றும் காட்டு பன்றிகள் தாக்குதலால் நஷ்டமடையும் விவசாயிகளுக்கு அரசு எந்தவித நிவாரணமும் தருவதில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் செய்ய வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மழை மற்றும் காட்டு யானைகளால் நாசமாகும் பயிர்களுக்கு நிவாரணம் தருவதுபோல் குரங்கு மற்றும் காட்டு பன்றிகள் விளை நிலத்தை நாசப்படுத்தினால் அரசு நிவாரணம் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு ேகாரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: