முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் 2-ஆவது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலை போராட்டத்தை தொடங்கிய அங்கன்வாடி ஊழியர்கள் இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கினர், இன்றும் 2-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை தொடர்கின்றனர்.  

இதில், 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபடி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக, இப்பணியாளர்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், உதவியாளர்களுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டத்தல் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த போரட்டத்தில் நுற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்களுடைய கோரிக்கைகள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: