ஏழை குடும்ப தலைவர் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு... சாமானியர்களுக்கு பலன் கொடுக்கும் பட்ஜெட் அறிவிப்புகள்

சென்னை,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து பயிர்க்

கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனால், ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் செலுத்த வேண்டிய மொத்தம் ரூ.12,110.74 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19  காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக  2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத்திட்டத்தினை ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப கல்வியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்ெகாண்டுள்ளது.  மேலும், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைபள்ளிகளில் ரூ.530.13 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதவரை கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.

* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து தமிழ்நாடு ரூ.1,08,913 கோடி மொத்த முதலீட்டு மதிப்பில் 2,55,633 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 166 திட்டங்களை ஈர்த்துள்ளது.  கோவிட் தொற்றின் போது அனைத்திந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 1,69496 பேருக்கு வேலை வாயப்பு அளிக்கும் விதமாக 88,727 கோடி மதிப்பிலான  முதலீடுகளுக்கான 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதல்வர் தலைமையின் கீழ் உயர்நிலைக்குழு 71,776 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக 39,941 கோடி மதிப்பில் 62  முதலீட்டு திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கியுள்ளது.

* தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவிட் தொற்றினால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், புத்துயிர்  அளிப்பதற்கும், டாக்டர் சி.ரங்கராஜன் குழு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. இப்பரிந்துரைகளின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டாக்டர் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை  ஏற்றுக்ெகாண்டு கடன் வழங்கும் நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும், கூடுதல் மூலதனமாக ரூ.1000 கோடியை  அரசு வழங்கும்.

* தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் இத்திட்டம் நீட்டிக்கப்படும். தற்போதைய ஒட்டு  மொத்த காப்பீட்டு தொகையான ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.  மேலும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும். பணமில்லா சிகிச்சை பெறுவதற்கான  நடைமுறைகள் மேலும் ஒருங்கிணைக்கப்படும்.

*மாற்றுத்திறனாளிகளுக்கான நலனுக்காக ரைட்ஸ் என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், உலக வங்கியின் பரிசீலனையில் இந்த திட்டம் இருப்பதாகவும் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*அம்மா விபத்து காப்பீட்டு திட்டத்தின் மூலமாக, குடும்ப தலைவரின் விபத்து மரணத்திற்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இயற்கை மரணமாக இருந்தால், 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதேபோல நிரந்தர இயலாமைக்கு ரூ.2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: