தினமும் 4 மணிநேரம் பயிற்சி: ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் ஓய்வு பெற விரும்புகிறேன் : சானியா மிர்சா பேட்டி

ஐதராபாத்:இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா(33). பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் முடித்த இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மிண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.  இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையரில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற 34 வயதான சானியா மிர்சா இந்தஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல தீவிரம்காட்டி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ஒலிம்பிக் என் மனதில் உள்ளது. நான் தினமும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்கிறேன். நான் ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்கிறேன், ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான சவாலுக்கு என்னை பொருத்தமாக வைத்திருக்கிறேன், இது எனது 4வது ஒலிம்பிக் போட்டியாகும். ஒலிம்பிக் பதக்கம் என்பது எனது சாதனைகள் பட்டியலில் இல்லாத ஒரு விஷயம். டோக்கியோவில் பதக்கத்துடன் எனது டென்னிஸ் வாழ்க்கையை முடிக்க  விரும்புகிறேன். நான் வெற்றிபெற ஒரு வாய்ப்பில் இருக்க விரும்புகிறேன். நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நான் உணர்கிறேன் என்றார்.

Related Stories:

>