அதிரடி அறிவிப்பு!: பீகாரில் +2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.25,000...பட்டப்படிப்பு முடித்தால் ரூ.50,000 வழங்க முடிவு..!!

பாட்னா: பீகாரில் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் 2021 - 22ம் ஆண்டுக்கான நிதி பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான தார் கிஷோர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். அதில் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு தேர்ச்சி விகிதம், சாதி, மதம் போன்ற எந்தவொரு நிபந்தனையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க 110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பிற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சோலார் மின் விளக்குகள் பொறுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: