வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவினுக்கு பால் கொள்முதல்-வாகனங்களுக்கு டெண்டர் திறப்பு

வேலூர் : வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவின் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இங்கு பால், தயிர், மோர், நெய், கோவா உள்ளிட்ட பால் மற்றும் பால் உபபொருட்கள் தயாரிக்கப்பட்டு சென்னை மற்றும் உள்ளூர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஆவின் நிறுவனத்திற்கு தேவையான பால் கொள்முதல் செய்ய 20 போக்குவரத்து வழித்தடங்களில் ஆவின் டேங்கர் லாரிகள், மினிவேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த போக்குவரத்து வாகனங்களுக்கான டெண்டர் தேதி முடிவுற்றதாக தெரிகிறது.

இதையடுத்து ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்ய போக்குவரத்து வாகனங்களுக்கான டெண்டர் எடுக்க மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட டெண்டர் பெட்டி நேற்று ஆவின் பொதுமேலாளர் பார்த்தசாரதி முன்னிலையில், வீடியோ பதிவுடன் திறக்கப்பட்டது.

அப்போது ஆவின் அலுவலர்கள் மணி, மன் நாராயணன் உட்பட பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவது வழக்கம். இந்நிலையில் முத்திரையிடப்பட்ட பெட்டியில் போடப்பட்ட டெண்டர் விண்ணப்பங்கள் இன்று(நேற்று) வீடியோ பதிவுடன் திறக்கப்பட்டது. அதில் குறைந்த விலையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நபருக்கு டெண்டர் விடப்படும், என்றனர்.

Related Stories: