×

கறம்பக்குடி அருகே வடமாடு ஜல்லிக்கட்டு-காளைகள் முட்டி 8 பேர் படுகாயம்

கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மாங்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் சந்தனக்காப்பு விழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.இதில் புதுக்கோட்டை மதுரை, திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 11 மாடுகள் கலந்து கொண்டன. இதில் மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ஒரு காளை சுமார் 25 நிமிடம் களத்தில் நின்று விளையாடி அனைத்து பரிசுகளையும் அள்ளி சென்றது. இந்த வடமாடு ஜல்லிக்கட்டில் கல்லூரி மாணவர் உள்பட பல்வேறு மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு, மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பேன், குடம், குத்துவிளக்கு, தங்ககாசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன இந்த வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியை காண மாங்கோட்டை மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் ஏராலமான போலீசார் ஈடுபட்டனர்.

Tags : Karambakudy: Sri Kaliamman Temple in Mankottai village, Karambakudy taluka, Pudukkottai district
× RELATED விளக்குதூண் கம்பத்தை அகற்றிய...