×

மாவட்ட அளவிலான விளையாட்டு மௌண்ட் சீயோன் பள்ளி மாணவன் சாம்பியன்

புதுக்கோட்டை :புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் மௌண்ட் சீயோன் பள்ளி மாணவன் சாதனை படைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டுப் பிரிவு சார்பில் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் உற்சாகத்தோடு பங்கேற்றனர்.

இவர்களில் மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் நிரஞ்சன் எனும் மாணவன் 200 மீட்டர் டேஷ் பிரிவில் முதலிடமும், 80 மீட்டர் ஓட்டத்தில் 3வது இடமும் பெற்று சாதனை படைத்தார். வெற்றிபெற்ற மாணவனை மௌண்ட் சீயோன் பள்ளி தலைவர் டாக்டர் ஜோனத்தன், இணை இயக்குனர் ஏஞ்சலின் ஜோனத்தன் ஆகியோர் பாராட்டினர். மேலும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர்களும், ஆசிரியர்களும், மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : zion , Pudukkottai: A student of Mount Zion School set a record in the district level sports competition held at Pudukkottai. Pudukkottai
× RELATED தபால் வாக்களிக்க ஏற்பாடு தீவிரம்...