×

கிளிமூக்கு வால் சேவல் கண்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும்

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் அருகே கல்லணை சமுதாய கூடத்தில் மாவட்ட அளவிலான கிளிமூக்கு வால் நாட்டுசேவல் வளர்ப்போர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ஆதிமுத்தன் தலைமை வகிக்க, செயலாளர் ஆலடி, துணை தலைவர் முருகன், துணை செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் செல்லத்துரை, பாலராஜ், ரஞ்சித் உள்பட 50க்கும் மேற்பட்ட சேவல் வளர்ப்பவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜல்லிக்கட்டு, ரேக்ளாரேஸ் போட்டிகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதேபோல் பாரம்பரிய வழக்கப்படி. கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நடத்தப்படும் கிளிமூக்கு வால் நாட்டு சேவல் கண்காட்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன் நடந்து வருகிறது. ஆனால் மதுரை மாவட்டத்திற்கு மட்டும் இதற்கு அரசு தடை விதித்து உள்ளது. எனவே மதுரை மாவட்ட அளவில் கிளிமூக்கு வால் நாட்டு சேவல் கண்காட்சி நடத்துவதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி சுந்தர் செய்திருந்தார்.

Tags : Kilimus ,Rooster , Alankanallur: District Level Klimukku Wall National Service Growers Association Consultation at Kallanai Community Hall near Alankanallur
× RELATED சிவகாசியில் மாநில சேவல் சண்டை போட்டி: 1500 சேவல்கள் பங்கேற்பு