×

விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,738.81 கோடி ஒதுக்கீடு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது. இந்தநிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

இன்று முதல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெற்றது. அப்போது துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 10வது முறையாகும். பின்னர் உரையாற்றிய அவர்;

* அடுத்த ஓராண்டில் தமிழக அரசின் கடன்சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்; தற்போது அரசின் கடன்சுமை ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ளது.

* கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு

* மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு

* அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

* 2021-22-ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்

* 2021-22-ல் நிதிப்பற்றாக்குறை மாநில ஜிடிபியில் 3.94%, ரூ.84,202.39 கோடியாக கட்டுப்படுத்தப்பட்டது

* தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

* கொரோனா தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி அரசு செலவிட்டுள்ளது

* கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது

* நீர்வள துறைக்கு ரூ6,453 கோடி நிதி ஒதுக்கீடு

* உள்ளாட்சி துறைகளுக்கு ரூ22,218 கோடி நிதி ஒதுக்கீடு

* சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு; செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடு

* புதிதாக தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு  

* தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை

* பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3,700 கோடி நிதி ஒதுக்கீடு

* நெடுஞ்சாலை துறைக்கு ரூ18,750 கோடி நிதி ஒதுக்கீடு

* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 90% லிருந்து 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது

* பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கீடு

* தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு

* எல்ஐசி மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு காப்பீடு திட்டம்

* காவல்துறைக்கு ரூ.9,567 கோடி நிதி ஒதுக்கீடு

* அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்

* பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* அவிநாசி - அத்திக்கடவு திட்டம் வரும் டிசம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்ப்பு

* தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு

* அருட்பெருஞ்சோதி வள்ளலார், காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன
 
* தமிழக மின்சாரத்துறைக்கு ரூ.7,217 கோடி நிதி ஒதுக்கீடு

* 8 ஆண்டுகளுக்குப் பின் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது

* 15.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ1,715 கோடி நிவாரணம்

* இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு

* நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 2021-22ம் ஆண்டில் கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1224.26 கோடி ஒதுக்கீடு

* தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பூசம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

* தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமலில் உள்ளது

* ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் RIGHTS சிறப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்

* 2020-21ம் ஆண்டில் மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.11,943.85 கோடி செலவிடப்பட்டுள்ளது

* குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடு

* 2021-22ம் ஆண்டில் நீதித்துறைக்கு ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு

* 2021-22ம் ஆண்டில் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.6023.11 கோடி  ஒதுக்கீடு

* தமிழகத்தின் வரி வருவாய் 17.64% குறைந்துள்ளது

* தமிழகத்தின் பற்றாக்குறை ரூ.65,994 கோடியாக அதிகரிப்பு

* மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.688.48 கோடி ஒதுக்கீடு

* திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் திறந்தவெளி அரங்கம் கட்ட ரூ.9 கோடி வழங்கப்படும்

* இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்மாட்டு துறைக்கு 2021-22-ல் ரூ.229.37 கோடி ஒதுக்கீடு

* நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31க்குள் முடிக்கப்படும்

* தமிழக காவல்துறையை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு

* அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடு

* திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது; திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது

* மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு

* கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்

* பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடம் கற்பிக்கப்படும்

* ஆவின் வரலாற்றிலேயே முதன்முறையாக 2020 ஜூலை 19-ம் தேதி 40.63 லட்சம் லிட்டர் கொள்முதல்; ஆவின் மற்றும் மாவட்ட ஒன்றியங்களால் தினசரி 24.49 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

* காவிரி- தெற்கு வெள்ளாறு நதிகள் இணைப்பிற்காக ரூ.6,941 கோடி ஒதுக்கீடு

* உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் ரூ.5,171 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

* சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.6,448 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

* பழங்குடியினர் துணை திட்டத்திற்கு ரூ.1,276.24 கோடி ஒதுக்கீடு

* ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக ரூ.13,987.58 கோடி ஒதுக்கீடு

* தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6941 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல்

* வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை

* 2021- 22ஆம் ஆண்டில், அம்மா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்தில் குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு

* சென்னையில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.18,750 கோடி ஒதுக்கீடு

* மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,738.81 கோடி ஒதுக்கீடு

* ரூ.144.33 கோடி நிதியில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன

* தமிழ்நாட்டில் 15,900 ஹெக்டேர் அளவுக்கு மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது

* நெல் ஜெயராமன் மையம் ரூ.47.87 லட்சம் செலவில் நீடாமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது

* சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2-ம் கட்ட பணி ரூ.5,171 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

* 2021- 22ஆம் ஆண்டில் கோவிட்19 பெருந்தோற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு 13352 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* மின்கட்டண மானியன்களுக்காக ரூ.8,834.68 கோடி ஒதுக்கீடு

* 2021 - 22ஆம் ஆண்டில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 436.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 28.58 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

* அரசு ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த மருத்துவ காப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


* அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி நிதிஒதுக்கீடு

* தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

* வீட்டு வசதி துறைக்கு நிதியுதவியாக உலக வங்கியிடம் இருந்து, 1,492 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

* சென்னை மாநகராட்சிக்காக தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி திட்டங்கள் வடிவமைப்பு. சிறப்பு திட்டம் ரூ.3,140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* சென்னை-குமரி தொழில் வழித்தட திட்டம் ரூ.6,448 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* படிப்படியாக அமைய உள்ள 2,000 அம்மா மினி கிளினிக்கிற்காக ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு.Tags : O. Panneerselvam , Deputy Chief Minister O. Panneerselvam presented the interim budget of Tamil Nadu
× RELATED தலைமையிடம் விசுவாசம்... மக்களின் நிலை...