ராமேஸ்வரம் கோயிலில் பரபரப்பு விஜயேந்திரர் தரிசனம் செய்ய குருக்கள் எதிர்ப்பு

ராமேஸ்வரம்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். அவர், கோயிலுக்கு வருவதற்கு குருக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரை அருகே அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு விஜயேந்திர சங்கராச்சாரியார் நேற்று வந்தார். அவர், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி கருவறைக்குள் சென்று வழிபட்டார். சுவாமி சன்னதி கருவறைக்குள் செல்ல முயன்ற சங்கராச்சாரியாரை கோயில் குருக்கள் ஒருவர் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்தார்.

இதனால் சங்கராச்சாரியாருடன் வந்த பக்தர்களுக்கும் கோயில் குருக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை கமிஷனர் கல்யாணி மற்றும் அலுவலர்கள், காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். சங்காராச்சாரியார் கோயில் கருவறைக்குள் செல்வதை தடுக்கும் நோக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக சுவாமி சன்னதி கருவறைக்குள் கைங்கர்யம், குருக்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். திட்டமிட்டே இப்பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர் என்று சங்கராச்சாரியாருடன் வந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

Related Stories: