கட்டணம் குறைப்பு எதிரொலி: மெட்ரோ ரயில்களில் அதிக கூட்டம்

சென்னை: கட்டண குறைப்பு எதிரொலியாக மெட்ரோ ரயில்களில் அதிகளவில் பொதுமக்கள் நேற்று ஆர்வமுடன் பயணம் செய்தனர். வண்ணாரப்பேட்டை முதல் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு வழித்தடத்தை கடந்த 14ம்  தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால், சேவை தொடங்கப்பட்ட அன்றே மெட்ரோ ரயில் கட்டணத்தை ₹70ஆக மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர்த்தியது. இது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, கட்டண  உயர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்கு மாறாக கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயில் கட்டணத்தை ₹50 ஆக தமிழக அரசு  குறைத்தது. இந்த கட்டண குறைப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த கட்டண முறைப்பு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.

இதனால், ஆர்வமுடன் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் நேற்று பயணம் செய்தனர். திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய நிலையத்தில் இருந்து கோயம்பேடு, விமானநிலையம், கிண்டி, சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு நேற்று ஏராளமானோர்  பயணம் செய்தனர். இந்த நிலையங்களை சாதாரண நாட்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்துவார்கள். ஆனால், நேற்று 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: