பங்குச்சந்தையில் 3.7 லட்சம் கோடி இழப்பு

மும்பை: பங்குச்சந்தைகள் நேற்று 2வது நாளாக சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 1,145 புள்ளிகள் சரிந்து 49,744 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 306 புள்ளிகள் சரிந்து  14,676 ஆகவும் இருந்தது. கடந்த வார இறுதியில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவன பங்குகளின் மொத்த மதிப்பு 2,03,98,381.96 ஆக இருந்தது. இது நேற்று 3,71,883.82 கோடி சரிந்து 2,00,26,498.14 கோடியானது. கடந்த 19ம் தேதி  சரிவையும் சேர்த்தால், தொடர்ந்து 2 வர்த்தக நாட்களில் பங்கு முதலீட்டாளர்கள் 5,67,184.34 கோடி இழந்தனர். ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் பங்குகள் பெருமளவில் சரிந்தன. நேற்றைய சரிவு கடந்த 2 மாதங்களில்  மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

Related Stories:

>