சட்டமன்ற தேர்தலையொட்டி ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி..!!

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில், 475 வாக்குசாவடிகள் பதற்றமானவையாகவும், 157 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருந்தாலும், பிரச்சனை ஏற்பட்டு மறுவாக்குபதிவு செய்திருந்தாலும், குறைவான வாக்குகள் பதிவானவையும் பதற்றமான வாக்குசாவடிகளாக கருதப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிபிட்ட சமூகத்தினர் ஆதிக்கம், சமூக மோதல் ஏற்படக்கூடிய இடங்கள், ரவுடி கும்பல் செயல்படும் இடங்களில் உள்ள வாக்குசாவடிகள் மிக பதற்றமானவையாக கணக்கிடப்படும்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அளித்த பேட்டியில்:  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: