சில்லி பாயின்ட்

* நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச், ஹேக்லி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.

* அகமதாபாத்தில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட், பகல்/இரவு போட்டி என்பதால் இந்திய அணி வீரர்கள் இளஞ்சிவப்பு வண்ணப் பந்து உபயோகித்து நேற்று தீவிரமாக வலைப்பயிற்சி செய்தனர்.

* ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பதவி விலகியுள்ளார்.

* மான்டிநீரோவில் நடக்கும் அட்ரியாடிக் பியர்ல் குத்துச்சண்டை போட்டித் தொடரில் இந்திய இளைஞர் அணியினர் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

* கபில் தேவுக்கு பிறகு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 2வது இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் ஷர்மா பெறவுள்ளார்.

Related Stories:

>