×

‘யூத்’களை கவரும் வெள்ளி

நன்றி குங்குமம் தோழி

தமிழர் அழகியலில் நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை  ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு  முக்கிய அம்சம். தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என பல இருந்தும் இன்றும் மக்கள் மத்தியில் வெள்ளி நகைகளுக்கு ஒரு தனி மதிப்புண்டு.  வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இது பொதுவாக தங்கத்திற்கு அடுத்து மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்கள் வெள்ளி நாணயங்களை தான் தங்களின் பணமாக பயன்படுத்தி  வந்தனர். வெள்ளி உலகமெங்கும் பணமாகவும் நகையாகவும் பல ஆயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாம்பல் வண்ணத்தில்  தெரிந்தாலும் வெள்ளிக்கு தனி மதிப்பு இருக்கிறது. அதைத்தான் ‘Born with Silver Spoon’ என்று குறிப்பிடு வார்கள். அதாவது, வாழ்க்கையை  மிகவும் சிறந்த முறையில் அனுபவிப்பவர்களை இப்படி குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால் இனி அதற்கு அவசியமில்லை. காரணம்   JewelOne உங்களுக்காக ‘ZILARA’, என்ற பெயரில் புதிய டிசைன்களில் வெள்ளி நகைகளை  அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு டிசைன்களும் நம் கண்களை கவர்வது மட்டும் இல்லாமல், அவை அனைத்தும் தனித்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு  நகைகளின் வடிவைமப்பில் அதை உருவாக்கிய கலைஞரின் படைப்பாற்றல் மற்றும் நுணுக்கத்தை நாம் காணமுடியும். இன்றைய கால  தலைமுறையினர் தங்க நகைகளை விட வெள்ளி நகைகளை தான் அதிகம் விரும்பி அணிகிறார்கள்.

தங்கத்தை விட விலை குறைவு. தினசரி பயன்பாட்டிற்கு வெள்ளி தான் சிறந்தது. மேலும் இவை கருத்தாலும், அதன் அழகும் தனித்தன்மை  வாய்ந்தது. ZILARAவில் கண்கவரும் மற்றும் புதிய டிசைன்களில் மோதிரங்கள், நேர்த்தியான நெக்லெஸ், வண்ண வண்ண கம்மல்கள், அழகான  சங்கிலிகள் மற்றும் நவநாகரீக டாலர்கள் அனைத்தும் இன்றைய மார்டர்ன் பெண்கள் அணியக்கூடிய டிசைன்களில் உள்ளன. இவை அனைத்தும்  பறவை சிறகுகள் போல் மிகவும் லேசானவை.

ஒவ்வொரு நகைகளையும் பூலோகம் முழுதும் உள்ள மிகவும் கைதேர்ந்த டிசைனர்களால் வடிவைமக்கப்பட்டிருப்பது தான் இதன் சிறப்பம்சம். தாய்  நிறுவனமான எமெரெல்டுடன் இணைந்து சிலாரா செயல்படுவதால், இதனை அணியும் ஒவ்வொருவரும் உண்மையிலேயே பெருமை கொண்டாடலாம்.  சிலாரா தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி முழுதும் 15 இடங்களில் தங்களின் கிளைகளை ஜனவரி 19ம் தேதி பரந்து விரிக்க துவங்கி  இருக்கிறது. வெள்ளி நகைகளை அணிய விரும்பும் ஒவ்வொருவரின் தேர்வு சிலாராவாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

- பிரதிகா

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!