வழுக்கை பற்றி வகைவகையான தகவல்கள்

*    உங்கள் தாய் தந்தைக்கு வழுக்கை இருந்திருந்தால், உங்களுக்கும் கட்டாயம் இருக்கும் என்பார்கள். ஆனால், ஆய்வாளர்கள் சொல்வது என்னவென்றால் தந்தைக்கு வழுக்கை இருந்தால் மகனுக்கும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டே தவிர, வழுக்கை விழுந்தே ஆகவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.

*    வழுக்கைத் தலையர்களுக்கு அறிவு அதிகம் என்பது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த கிளப்பிவிடப்பட்ட புரளி. வழுக்கைக்கும், அறிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

*    அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு முடிகொட்டும் என்பதும் மூடநம்பிக்கை.

*    வழுக்கைத் தலையர்கள் ஜொள்ளர்கள் என்று சொல்லப்படுவது அநியாயமான அவதூறு.

*    மொட்டை அடித்தால் முடிவளரும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

*    தலைகீழாக தினமும் நின்றால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடிவளரும் என சொல்லப்படுவது அடிப்படையற்ற நம்பிக்கை.

*    ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும் என்பதற்கும் ஆதாரமாக எந்த புள்ளிவிபரமும் இல்லை.

*    முடி கொட்டும் பிரச்சினைக்கு Finastride (tablet), Zincovit (tablet), MinTop அல்லது Tugain - 5% minoxidil (தைலம் மாதிரி அப்படியே தலையில் தடவலாம்),  Kz Lotion - Ketoconazole Lotion 2% (ஷாம்பூ) போன்ற மருந்துகள் ஓரளவுக்கு நிவாரணம் தரலாம். ஆனால் முழுக்க வேலை செய்யும் என்று உத்தரவாதம் தருவதற்கில்லை.

*    நிரந்தரத் தீர்வு என்ன? இயற்கை நமக்கு எதை விதித்திருக்கிறதோ, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான்.

Related Stories: