கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* காய்ந்த தேங்காயை துருவுவதற்கு சிரமமாக இருக்கும். அதனால் தேங்காயை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு துருவினால் எளிதாக இருக்கும்.

* சப்பாத்தி செய்யும் போது ஒரு கைப்பிடி மைதாமாவும் ஒரு கைப்பிடி கேழ்வரகு மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

- ஆர்.பூஜா, சென்னை.

* சிறிது சீரகம், மிளகு, இரண்டு கண்டந்திப்பிலி, ஒரு ஸ்பூன் தனியா போன்றவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்து சிறிது புளி ஜலத்தில் கொதிக்க வைத்து இருமுறை குடித்தால் உடம்பு வலி வந்த சுவடு தெரியாமல் பறந்தே போகும்.

* மூச்சுப்பிடிப்பு, இடுப்புப்பிடிப்பு, உடல்வலி போன்றவற்றுக்கு கருந்துளசிச்சாறு, இஞ்சிச் சாறு சம அளவு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அருந்திவர குணம் தெரியும்.

- ஆர்.அஜிதா, கம்பம்.

* இஞ்சிச்சாறை மண்டையில் தேய்த்து மசாஜ் செய்தால் தலைமுடி செழிப்பாக வளரும்.

*  பச்சை வெங்காயத்துடன் உப்பை சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக வயிற்று வலி குணமாகும்.

- எஸ். சடையப்பன்,காளனம்பட்டி.

* புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜி சுட்டால், மணமும் சுவையும் இருக்கும்.

* ஜவ்வரசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவைப் பாலில் கலந்து ஊற்றினால் பாயசம் கெட்டியாகவும் சுவையுடனும் இருக்கும்.

- இல. வள்ளிமயில்,மதுரை.

* மாம் பிசிறை எலுமிச்சை சாறுடன் கலந்து வைத்துக் கொண்டு சொறி, சிரங்கு, புண்களின் மேல் தடவி வந்தால் புண்கள் ஆறும்.

* வியர்வை நாற்றத்தை போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்து குளித்தால் நாள் முழுதும் வாசனையாக இருக்கும்.

- அ.பவானி,வயலூர்.

* எலுமிச்சம்பழம் நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்க, பழத்தை திக்கான துணியில் வைத்துக் கட்டி ஃப்ரிட்ஜிக்குள் வைக்க, பல நாட்கள் வாடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

* இஞ்சி துவையல், புதினாத் துவையல் பசியின்மையை நீக்கும். வெறும் பாத்திரத்தில் 1 கிராம்பு, 1ஏலம், 1 ஸ்பூன் கசகசா (அ) சீரகம் வறுத்து, ஒரு டம்ளர் நீரில்

வெல்லத்துடன் நன்கு கொதிக்க வைத்துப் பருக நன்கு பசிக்கும். களைப்பு நீங்கிடும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

* அரைக்கீரைக் காம்பு, முளைக்கீரை காம்பு, முருங்கைக் கீரை நுனிக்காம்புடன் (ஏதேனும் ஒன்று) சீரகம், மீளகு, பூண்டுடன் சூப் செய்து பருகினால் சோர்வு, வயிற்றுவலி பறந்தோடும்.

* ஒரு தேங்காய்த் துண்டு, ஏலம் ஒன்று, 5 பாதாம் அரைத்து, பனங்கற்கண்டுடன் பருகினால் வயிற்றுவலி, உடல் சூடு மறையும்.

- கவுரி பாய், திருவள்ளூர்.

* பூண்டு தட்டி பாலில் வேகவைத்து பாலையும், பூண்டையும் உட்கொண்டால் தாய்ப்பால் பெருகும்.

- எஸ். வேல் அரவிந்த், திண்டுக்கல்.

* ரசம் கொதித்து வரும் போது, அதில் 2 அல்லது 3 துண்டு அன்னாசிப் பழம் நறுக்கிப் போட்டால் ரசம் அன்னாசி மணத்துடன் அருமையாக இருக்கும்.

* வற்றல் குழம்பு வைக்கும் போது, ஓமம் தாளித்துக் கொட்ட நல்ல மணத்துடன், அஜீரணத்துக்கு மருந்தாகவும் இருக்கும்.

- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.

* லவங்கப்பூ சூரணத்தை முலைப்பால் விட்டு உறைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் ஜலதோஷம் போய்விடும்.

- எஸ். கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

Related Stories: