மஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஹைபிரிட் வகை காலிபிளவர் பயிரிட்ட விவசாயி

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் காலிபிளவர் விளைவித்து ஆச்சரியமடைய செய்து உள்ளார்.நாசிக் அடுத்த தாபடி கிராமத்தை சேர்ந்த மகேந்திர நிகம் என்ற விவசாயி, தனது 5 ஏக்கர் நிலத்தில் ஹைபிரிட் வகை காலிபிளவர் பயிரிட்டு உள்ளார். 70 நாட்கள் கடந்த நிலையில் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் காலிபிளவர் விளைந்து உள்ளது.40 ஆயிரம் ரூபாய்க்கு காலிபிளவர் விதைகளை வாங்கி, 5 ஏக்கரில் பயிரிட்ட விவசாயிக்கு விற்பனை மூலம் 16 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

Related Stories:

>