நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்

செய்முறை:

Advertising
Advertising

நாட்டுக்கோழிக்கறியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழியவும். இஞ்சியை தோல் நீக்கி சாறு பிழிந்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய்த்தூள் போட்டு கலக்கவும். இத்துடன் கோழிக்கறியை போட்டு நன்றாக பிசையவும். இத்துடன் கரம் மசாலாத்தூளை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும். வாணலியில் 150 கிராம் அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் ஊறிய கோழியை கொட்டி வதக்கவும். கறி பொன்னிறமாக வந்ததும் கறிவேப்பிலை, மல்லித்தழையை சேர்த்து இறக்கவும். இஞ்சி சேர்த்து செய்த வறுவல் என்பதால், மிகவும் சுவையாக இருக்கும்.