பெண்மையை போற்றும் சர்வதேச மகளிர் தினம்

இன்று உலக மகளிர் தினம். தடைகள் பல தாண்டி சாதனை படைத்து வரும் ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடும் வகையில் இந்த பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலக மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இப்படி பெண்களை கொண்டாட ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தினங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 1975-ம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐநா கொண்டாடி வருகிறது. இதுவரை நுழையாத பல புதிய தொழில்களில், நவீன துறைகளில் பெண்கள் இன்று சாதனைகள் படைக்கின்றனர். இதெல்லாம் வெளிச்சத்துக்கும் வருகிறன்றன. பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

Advertising
Advertising

தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ஐ.நா முன்மொழிந்திருக்கும் நோக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம் என்பதே. முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிறப்பு டூடுள் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய கூகுளில் உத்வேகம் அளிக்கும் 13 சர்வதேச பெண் பிரபலங்களை நினைவு கூறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: