×

லவ் டயட்

நன்றி குங்குமம் தோழி

இரு மனங்களில் காதல் அரும்புவிடும் சமயத்தில் மனதை வெளிப்படுத்த பரிமாறப்படும் விஷயத்தில் உணவுப் பண்டங்களும் அடங்கும். தனது ஆளை கரெக்ட் பண்ண ஆண்கள் கடன் வாங்கியாவது டிரீட் வைப்பதைப் பார்க்கிறோம். ஆம். காதலிக்கும் காலத்தில் நீங்கள் உண்ணும் உணவு அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. எனர்ஜியை அள்ளித்தருவதுடன் அது உங்கள் காதல் ஹார்மோனுக்கு  உற்சாகத்தையும் அளிக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
‘‘காதலர் தினம் வரப்போகிறது. காதலிக் கப்படும் பெண்களுக்குக் கிடைக்கப் போகும் பரிசுகள் எண்ணில் அடங்காதவை. அவுட்டிங், ஷாப்பிங் எங்கு செல்லும் போதும் ஐஸ்கிரீம், சாக்லெட், ஃபாஸ்ட் ஃபுட் என பிடித்ததெல்லாம் சாப்பிடும் வாய்ப்புக் கிடைக்கும். இதனால் எடை கூட வாய்ப்புள்ளது. காதலர் தினம் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே உங்களது டயட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

காதலர் அன்பாய் வாங்கிக் கொடுக்கும் போது ஆசைக்கு அணை போட முடியாது. இதனால் உணவில் எடை கூட்டும் விஷயங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். காய்கறி சாலட் மற்றும் பழங்களைக் கொண்ட சாலட் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். ஆவியில் வேகவைத்த மற்றும் கிரில்ட் உணவுகள் அவசியம். உடலை மேகம் போல உணரச் செய்யும் உணவு வகைகள் நீங்கள் காதல் சிறகு கட்டிக் கொள்ளத் தூண்டும். காதலர் தினம் என்றாலே மனதுக்குள் சிவப்பு ரோஜாக்கள் பூக்கத் துவங்கும். உணவிலும் இது பிரதிபலிக்கும். ஸ்ட்ராபெரி மற்றும் ஆப்பிள், மாதுளை, கருப்பு திராட்சை ஆகியவற்றை பழமாகவோ,  பழச்சாறாகவோ எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பு நீக்கப்பட்ட பால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் எடுத்துக் கொள்ளலாம். பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளால் டாப்பிங்ஸ் உடனும் எடுத்துக் கொள்ளலாம். அதிகக் கொழுப்பு இல்லாத உணவுகள் எப்போதுமே உங்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்ளும். இனிப்பும் குளிர்ச்சியும் கலந்த உணவுகள் மகிழ்ச்சியான மனநிலையைத் தக்க வைக்கும்.

காரம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை அஜீரணக் கோளாறை உருவாக்கும். இதனால் மனதில் டென்ஷன் தொற்றிக் கொள்வதுடன் சின்ன விஷயத்துக்கும் கோபப்படும் நிலை உண்டாகும். காதலர்களுக்கு இடையிலான மகிழ்ச்சிக்கு சவாலாக அமைந்து விடும். காரத்தை விரும்பி சாப்பிடும் பெண்ணாக இருந்தாலும். காரம் மற்றும் அதிக மசாலாக்கள் சேர்க்கப்பட்ட அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவற்றை உண்பதால் செல்லும் இடங்களில் உண்டாகும் அசவுகரியத்தை தவிர்க்கலாம். ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெரி போன்ற பழச்சாறுகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவுக்கு முன்பே இவற்றை எடுத்துக் கொள்வதால் உங்களால் குறைவாகத் தான் சாப்பிட முடியும். இதனால் காதலர் வைக்கும் ட்ரீட்டால் உங்களின் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். அதே போல காதல் மிகுதியில் உணவைத் தவிர்க்க வேண்டாம். காத்திருக்கும் போதும், காதலருடன்  பயணிக்கும் போதும் டார்க் சாக்லெட் மிதமாக எடுத்துக் கொள்ளலாம். நிறையத் தண்ணீர் குடிக்கலாம்.  மகிழ்ச்சியும், அன்பும் உங்கள் உணவிலும் இருக்கட்டும். காதல் கொண்டாடுங்கள் பெண்களே!

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!