டெல்லி எல்லையில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம்; விவசாயிகள் வெளியேற காசியாபாத் மாவட்ட நிர்வாகம் கெடு: மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிப்பு

டெல்லி: டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. குடியரசு தின டிராக்டர் பேரணியில் மத்திய அரசால் செயற்க்கையாக வன்முறை உருவாக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் டெல்லி எல்லையில் போராட்டத்தை தொடர்ந்து வரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் விவாசாயிகளின் போராட்டத்தை கலைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் எல்லையில் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக விவசாய சங்க பிரதிநிதியான நரேஷ் திகைட் அறிவித்தார். ஆனால் அவரது சகோதரரர் ராகேஷ் போராட்டம் தொடரும் என கூறியுள்ளார். அங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடைப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் காசிப்பூரில் இருந்து இரவுக்குள் வெளியேறாவிட்டால் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று காசியாபாத் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கெடு விதித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. காசிப்பூர், சிங்கு,  டிக்கிரி எல்லைகளில் போலீசாரும் துணை ராணுவ படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே டெல்லி, ஹரியானா பகுதியை இணைக்கும் சிங்கு நெடுஞ்சாலை குறுக்கே ஜேசிபி இயந்திரம் மூலம் 5 அடி ஆழத்திற்கு போலீசார் பள்ளம் தோண்டினர். மேலும் போராட்டத்தை கலைக்கும் வகையில் சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: