×

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. தான் இருக்கும்!: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேச்சால் சலசலப்பு.!!

திருவள்ளூர்: அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று தே.மு.தி.க. தான் என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசி இருப்பது அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய விஜய பிரபாகரன், மக்கள் ஆதரவு தராததால் தான், தே.மு.தி.க. கூட்டணியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார். இல்லாவிட்டால் தனித்தே போட்டியிடுவோம். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. தான் இருக்கும். அத்திவரதர் போல விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வரும் போது பிரளயம் ஏற்படும். கேப்டனைப் போல் ஊழலை ஒழிப்பேன் என்று எந்தத் தலைவராலும் கூற முடியாது என்று விஜய பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே அக்கட்சிக்கு மாற்று தே.மு.தி.க. தான் என்று விஜய பிரபாகரன் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வருவார். தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து கூற முடியும். இதனால் இப்போதைக்கு அவரவர் பணியை செய்து வருகிறோம். தி.மு.க, அ.தி.மு.க.-வுக்கு மாற்றான ஒரே கட்சி தே.மு.தி.க. -தான். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாமல் ஓய மாட்டோம். சட்டசபையில் தே.மு.தி.க. -வின் குரல் ஒலிக்கும் என தெரிவித்தார். மக்கள் ஆதரவு இல்லாத ஒரு கட்சி எப்படி 41 இடங்களை எதிர்பார்க்கிறது என அதிமுக-வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : ADMK ,DMK , ADMK, DMK, Alternative, DMK, Vijaya Prabhakaran
× RELATED மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்