×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை:மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி, மாநில மாணவர் அணிச் செயலாளர்  சு.அமர்நாத், வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் ரமேஷ் உள்ளிட்ேடார் தி.மு.க.வில் இணைந்தனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி-மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சு.அமர்நாத் - வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் மு.இரமேஷ் -  திருவாடானை தொகுதி பொருளாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், வெளிநாடுவாழ் இந்தியர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அ.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : BC ,Stalin ,TN ,Dimu , மு.க.ஸ்டாலின்
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை