நாடாளுமன்றத்தில் நாளை குடியரசுத்தலைவரின் உரையை 16 அரசியல் கட்சிகள் புறக்கணிக்க முடிவு: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேட்டி

டெல்லி: நாடாளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2ம் அமர்வு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும். பிப்.,1 அன்று இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், நாளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.  நாளை காலை 11 மணிக்கு ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்கிறோம். எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவசரகதியில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகள் இல்லாமல், வேளாண் மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்றியதே, ஜனாதிபதி உரையை புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம் என கூறினார்.

Related Stories: