வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முகாம்

வால்பாறை :  வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருவதால், தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் கல்லார் மற்றும் சோலையார் எஸ்டேட்களில் புகுந்த காட்டு யானைகள் கூட்டமாக இரவு முழுவதும் நடமாடின. தொடர்ந்து துண்டு சோலை பகுதியில் யானைகள் முகாமிட்டன. வனச்சரகர் மணிகண்டன் உத்தரவின்பேரில், வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>