கோவை- நாமக்கலுக்கு ஹெலிகாப்டர் சேவை -சோதனை ஓட்டம் தொடங்கியது

நாமக்கல் : நாமக்கல்-திருச்சி ரோடு ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி வளாகத்தில், நேற்று மாலை ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. பின்னர், சற்று நேரத்தில் அங்கு தரையிறங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மக்கள் அங்கு வந்து ஹெலிகாப்டர் அருகில் நின்று செல்பி எடுத்து கொண்டனர். நாமக்கல் காவேரி நகரில் உள்ள அலுவலக முதல் மாடியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனம், விரைவில் கோவை, நாமக்கல் இடையே  ஹெலிகாப்டர் சேவையை  தொடங்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

முதல் பயணமாக கோவையை சேர்ந்த ஒரு தொழிலதிபர், இந்த ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். நாமக்கல்லில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவரது மகளை அழைத்து கொண்டு, ஒரு மணி நேரத்தில் அதே ஹெலிகாப்டரில் கோவை திரும்பினார். இதற்காக ஒரு மணி நேரம், பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டரை நாமக்கல் வானில் அதிகம் பார்த்திராத மக்கள், திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories:

>