காட்டு யானைகள் அட்டகாசம் -பொதுமக்கள் பீதி

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு மற்றும் குழிவயல் பகுதிகளில் தொடர்ந்து பல மாதங்களாக காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தினந்தோறும் குடியிருப்புகள் மற்றும் விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதால் கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சப்பந்தோடு பகுதியில் நுழைந்த காட்டு யானை விஜிஆப்ரஹாம் என்பவரின் வீட்டின் அருகே இருந்த குடிநீர் தொட்டிகள் மற்றும் பாக்கு,தென்னை மரங்களை உடைத்து சேதம் செய்தது. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள்  விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என கிராமமக்கள் குற்றம்சாட்டினர்.அட்டகாசம் செய்யும்  யானைகளை வனத்துறையினர்  விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: