பனிப்பொழிவு அதிகரிப்பால் மலர் நாற்றுகளுக்கு பாதுகாப்பு

ஊட்டி : நீலகிரியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு பாதுகாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டு ேதாறும் நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் நீர் பனி விழத்துவங்கும்.

நவம்பர் மாதம் முதல் உறைப்பனி விழத் துவங்கும். பொதுவாக டிசம்பர் மாதம் இறுதி வாரம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைப்பனியின் தாக்கம் காணப்படும். இச்சமயங்களில் அடிக்கடி 5 டிகிரி செல்சிசுக்கு குறைவாக வெப்பநிலை செல்வது வழக்கம். சில தினங்கள் 0 டிகிரி செல்சியசுக்கு செல்லும். ஆனால், இம்முறை வட கிழக்கு பருவமழை கடந்த வாரம் வரை பெய்த நிலையில், தற்போது தான் பனியின் தாக்கம் துவங்கியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக  ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. ேதாட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா போன்ற பகுதிகளில் உள்ள மலர் நாற்றுகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், நாற்றுகள் கருகி காய்ந்து விடாமல் இருக்க தற்போது பூங்கா நிர்வாகம் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்ெகாண்டு வருகிறது. தற்போது பூங்கா முழுவதிலும் உள்ள மலர் செடிகளை கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு பாதுகாத்து வருகிறது.

புல் தரைகள் கருகாமல் இருக்கா நாள் தோறும் பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், ஊழியர்கள் மலர் செடிகளை பாதுகாக்கும் பணிகளில் அதிகம் அக்கரை செலுத்தி வருகின்றனர்.

Related Stories: