கெட்டிசமுத்திரத்தில் குப்பை வண்டிகளை சிறை பிடித்த மக்கள்

அந்தியூர் : அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் அந்தியூர் பெரியஏரிக்கு புதுப்பாளையம் வழியாக செல்லும் பள்ளத்தில் கரையோரத்தில் கொட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அவ்வப்போது கரையோரத்தில் கொட்டிக்கிடக்கும் குப்பையில் சிலர் தீ வைத்து செல்கின்றனர்.  இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாவதுடன் மூச்சுதிணறலும் ஏற்படுகிறு. எனவே, இப்பகுதியில் குப்பைகளை கொண்டு வந்து கொட்ட வேண்டாம் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று இப்பகுதிக்கு குப்பைகளை கொட்டுவதற்காக நான்கு குப்பை வண்டிகளுடன் வந்த தூய்மை பணியாளர்களை மக்கள் சிறைபிடித்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலாளர் பெரியசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் இதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொள்கிறாம் என கூறியதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>