காட்பாடியில் விளையாட்டு மைதானம் பணிகள் முடிந்த நிலையில் திருத்திய மதிப்பீடு ₹2.79 கோடி வராததால் திறப்பு விழா தாமதம்-விளையாட்டு வீரர்கள் அதிருப்தி

வேலூர் : காட்பாடியில் விளையாட்டு மைதானம் பணிகள் முடிந்த நிலையில், திருத்திய மதிப்பீடு ₹2.79 கோடி தொகை வராததால் திறப்பு விழா தாமதமாகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காட்பாடியில் ராணுவவீரர்களுக்கான கேன்டீன் உள்ளது. இதற்கு அருகாமையில் ₹16 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் 36.68 ஏக்கரில், பல்நோக்கு மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த விளையாட்டு மைதானத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம், கூடைப்பந்து, ஹாக்கி, கோ கோ, கபடி, இறகுபந்து, டென்னிஸ், நீச்சல்குளம், கால்பந்து, 400 மீட்டர் தடகளபாதை, 1,500 அமரக்கூடிய பார்வையாளர் அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இரவு நேரத்திலும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வகையில் மைதானத்தில் உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்படி அனைத்து வகையான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானம் அமைக்க ₹16. 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருத்திய மதிப்பீடு தொகை ₹2.97 கோடி ெதாகை கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விளையாட்டு மைதானம் இம்மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், திருத்திய மதிப்பீடு ெதாகை வரப்பெறாததால், திறப்பு விழாவும் தாமதமாகிறது என்று புகார்கள் எழுந்துள்ளது.

கட்டி முடிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவராததால், வீரர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே அரசு திருத்திய மதிப்பீடு தொகையை ஒதுக்கி, விரைவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: